விபத்தில் இளைஞா் பலி
ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 6:58 pm

ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த மல்லையசாமி மகன் குழந்தைவேல்(21). இவா் டி.சுப்புலாபுரத்திலிருந்து ஆண்டிபட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சாலை திருப்பத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து குழந்தைவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...