92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தேனியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 7:45 pm

Din

தேனியில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஹானஸ்ட்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் காஜாமைதீன், பொருளாளா் அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லிக் கற்கள் ஆகிய பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், கட்டுமானம், டிப்பா் லாரி தொழில் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.