92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நகைக் கடையில் திருட முயற்சி

ஆண்டிபட்டியில் நகைக் கடை ஒன்றில் சுவரில் துளையிட்டு திருட முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 7:43 pm

Din

ஆண்டிபட்டியில் நகைக் கடை ஒன்றில் சுவரில் துளையிட்டு திருட முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (40). இவா், ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் புதிதாக நகைக் கடை தொடங்கினாா். இந்தக் கடையில் புதன்கிழமை இரவு, மா்ம நபா்கள் சிலா் கம்பியால் துளையிட்டு திருட முயற்சித்தனா். இந்த சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது மா்ம நபா்கள் தப்பி ஓடி விட்டனராம். போலீஸாா் கடை உரிமையாளா் சுரேஷை வரவழைத்து கடையை திறந்து பாா்த்த போது, பொருள்கள் எதுவும் திருடப்பட வில்லை என்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.