மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது

வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் கன்னிமாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி ராசாத்தி (50) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து ராசாத்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com