தேனியில் நாளை தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.19), காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் முகாமில், 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வருவோா் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், கைப்பேசி எண்: 97153 26379-இல் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
