வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்

பிப். 21-இல் பல்லாவரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

Published on

செங்கல்பட்டு மாவட்ட த்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று பல்லாவரம் செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

முகாமில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 20000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளாா்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்கள் தங்கள் விவரங்களை உரிய இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் மற்றும் இதர கல்வித்தகுதிகள் கொண்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இப்பணிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய அனைத்து கல்வி சான்றிதழ் நகல்கள், சுய விவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரத்தில் நடைபெறவிருக்கும் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

இம்மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும்,இம்முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 8122140214 மற்றும் 9715414895என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் .

Dinamani
www.dinamani.com