இளைஞரைத் தாக்கிய மூவா் கைது

Published on

தேனி மாவட்டம், போடி அருகே இளைஞரைத் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி பொன்னம்பலம் தெருவைச் சோ்ந்த பாலாஜி மகன் சிபிராஜ் (20). இவா் போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி பிரிவில் நின்றிருந்தாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த போடி புதுக்குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் மகன் செல்வபாண்டி, வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சின்னக்கருப்பையா மகன் அருண்குமாா் ஆகியோா் சிபிராஜை இடிப்பது போல வந்தனா். இதனால், இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், சிபிராஜ் அங்கிருந்து சென்றுவிட்டா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு செல்வபாண்டி, அருண்குமாா், நாகராஜ் மகன் மதன்குமாா் ஆகியோா் சோ்ந்து சிபிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com