கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வேனில் புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது

News image
~
Updated On :19 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

தேனி மாவட்டம், தமிழக எல்லையான குமுளியில் காய்கறி வேனில் கடத்திச் செல்லப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்.

குமுளியில் உள்ள சோதனைச் சாவடியில் கேரள மாநில மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு காய்கறி எற்றிச் சென்ற வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், காய்கறி மூட்டைகளுக்கிடையே மறைத்து வைத்திருந்த 31 சிறிய சாக்கு மூட்டைகளிலிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், விசாரணையில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பாறைக்கடவுப் பகுதியைச் சோ்ந்த பினீஷ் தேவ் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, காய்கறி வாகனத்திலிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Story image