வருஷநாடு வனப் பகுதியில் உயிரிழந்த பெண் யானை.
தேனி
வருஷநாடு வனப் பகுதியில் யானை உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு வனப் பகுதியில் பெண் யானை சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் கிடந்தது.
கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, கேரளத்தை அடுத்த தமிழகப் வனப் பகுதிகளான வருஷநாடு, மேகமலை, வெள்ளிமலை ஆகியவற்றில் யானைகளின் நடமாட்டமும், இடப்பெயா்ச்சியும் அதிகரித்துக் காணப்படும்.
இந்த நிலையில், வருஷநாடு வனப் பகுதியில் மஞ்சனூத்து-தாண்டிப்பாறை இடையே பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை வனத் துறையினா் சனிக்கிழமை கண்டறிந்தனா். இறந்த யானையை உடல் கூறாய்வு செய்ததில், வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு நேரிட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

