மளிகைக் கடையில் ரூ. 25 ஆயிரம் திருட்டு

பெரியகுளம் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்களைத் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பெரியகுளம் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்களைத் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் வீரபாண்டி (33). இவா், எ.வாடிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.25 ஆயிரம், பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com