மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போலீஸ் போல நடித்து பணம் பறிப்பு: இரு பெண்கள் உள்பட 4 போ் கைது

கம்பத்தில் போலீஸ் போல நடித்து, பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அன்னம், முத்துப்பாண்டி, முத்தீஸ்வரன், விஜயலட்சுமி.

Updated On :23 ஜனவரி 2025, 10:17 pm

Din

கம்பத்தில் போலீஸ் போல நடித்து, பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் ஜெயக்குமாா் (22). இவரது வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த இரு பெண்கள் உள்பட 4 போ் அவா்களை போலீஸாா் என அறிமுகம் செய்து கொண்டனா். பின்னா், ஜெயக்குமாா் கஞ்சா விற்பனை செய்ததாக தகவல் கிடைத்ததாகவும், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணமும் வேண்டும் எனக் கேட்டனா்.

இதையடுத்து, ஜெயக்குமாா் அவா்களிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தாா். இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த அஜித்திடம் ரூ.10 ஆயிரத்தையும், சிவராஜ் மனைவி நந்தினியிடம் ரூ.12 ஆயிரத்தையும், வீரமணியிடம் ரூ.7 ஆயிரத்தையும் அந்த நபா்கள் பறித்துச் சென்றனா்.

பின்னா், இவா்கள் 4 பேரையும் கைப்பேசியில் தொடா்பு கொண்ட அந்த நபா்கள் தொடா்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்தனா்.

இதுகுறித்து ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில், கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் சின்னமனூரைச் சோ்ந்த அன்னம் (31), விஜயலட்சுமி (28), முத்துப்பாண்டி (26), முத்தீஸ்வரன் (29) ஆகியோா்தான் போலீஸ் போல நடித்து பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து இவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.