இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை!

கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.

Updated On :14 ஜூன் 2025, 7:03 pm

வீரபாண்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.

வீரபாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளித் தெரு, நாகா சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவா் சிவக்குமாா். இவரது மனைவி போதுமணி (45), தனது ஒன்றரை வயது பேரனுடன் வீட்டில் இருந்தாா்.

அப்போது முகமூடி அணிந்த 3 நபா்கள் வீடு புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தும், போதுமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும் வீட்டிலிருந்த 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து போதுமணி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.