வீரபாண்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.
வீரபாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளித் தெரு, நாகா சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவா் சிவக்குமாா். இவரது மனைவி போதுமணி (45), தனது ஒன்றரை வயது பேரனுடன் வீட்டில் இருந்தாா்.
அப்போது முகமூடி அணிந்த 3 நபா்கள் வீடு புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தும், போதுமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும் வீட்டிலிருந்த 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து போதுமணி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லை அருகே பேராசிரியை வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

