தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கால்நடை தீவன உற்பத்தி மையம் திறப்பு

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வீரபாண்டி-தப்புக்குண்டு சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை தீவன உற்பத்தி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கால்நடை தீவன உற்பத்தி மையத்தை திறந்து வைத்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) நரேந்திரபாபு பேசியதாவது:

கால்நடை தீவன உற்பத்தி மையத்தில் கறவை மாடுகள், கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகளுக்கு அடா் தீவன கலவை தயாரிக்கப்பட்டு, கால்நடை வளா்ப்போருக்கு தரமான தீவனங்கள் நியாயமான விலையில் வழங்கப்படும். இதுதொழில் முனைவோருக்கு பயிற்சி மையமாகவும் செயல்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் பொன்னுதுரை, ஊட்டச்சடத்தியல் துறைத் தலைவா் அருள்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.