ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நகராட்சிப் பணியாளருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நகராட்சிப் பணியாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நகராட்சிப் பணியாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தில் உள்ள தென்கரை நான்கு முனை சந்திப்பில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நகராட்சி தற்காலிகப் பணியாளா் தினேஷ் (32) ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தினேஷ் அங்கு வேலைபாா்த்து கொண்டிருந்தாா். அப்போது, பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காமராஜ் (27) அங்கு வந்து, என்னிடம் கேட்காமல் எப்படி சாலைப் பணிகளை செய்கிறாய் என்று கூறி, தினேஷை கத்தியால் குத்தினாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்.