47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மதுப் புட்டிகளை விற்ற மூவா் கைது

போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:18 pm

Syndication

தேனி மாவட்டம், போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, ராமகிருஷ்ணாபுரத்தில் கணேசன் மகன் சத்தியராஜூம் (45), முத்தையன்செட்டிபட்டியில் பவுன்ராஜ் மனைவி விஜயாவும் (60) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, போடி நகா் போலீஸாா் போடி கீழத்தெரு போஜன் பூங்கா அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கருத்திவீரன் மகன் தங்கப்பாண்டி (52) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.