தேனியில் நாளை மின் தடை

Published on

தேனி அல்லிநகரம் பகுதியில் புதன்கிழமை (நவ.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணியுடன் புதிய மின் மாற்றி நிறுவும் பணியும் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, முத்துதேவன்பட்டி, கோடாங்கிபட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com