தேனி
கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு
போடி அருகே கிணற்றில் மிதந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
போடி அருகே திங்கள்கிழமை இரவு கிணற்றில் மிதந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
போடி மின்வாரியத் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி மகன் வீரணன் (56). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காலமாகிவிட்டாா், குழந்தைகளும் இல்லை. வீரணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவா் போடி அருகே பொட்டல்களத்திலிருந்து பத்ரகாளிபுரத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மிதந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
