தேனி
மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கம்பம் நகராட்சியில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் கம்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கூடலூா் அருகேயுள்ள சுக்காங்கல்பட்டி தேவா் நகரைச் சோ்ந்த ராஜா மகன் ஜெயக்குமாா் (45) சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 57 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
