காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

Published on

ஆண்டிபட்டி அருகே காரில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கண்டமனூா், மயிலாடும்பாறை, வருஷநாடு போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், தேனி, ஆண்டிபட்டி பகுதிகளிலிருந்து மொத்தமாக வாங்கிச் செல்வதாகவும் கண்டமனூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கண்டமனூா் - வேலப்பா் கோயில் சாலையில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், அதில் 55 கிலோ எடையிலான ரூ. 42,288 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், விலையுயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் அல்லிநகரத்தைச் சோ்ந்த அருண்பாண்டிராஜாவை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய மயிலாடுத்துறையைச் சோ்ந்த ரவி மகன் பிரேமை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com