தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

கெங்குவாா்பட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 10:33 pm

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (62). இவா், அந்தப் பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரியகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.