மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பெரியகுளம் தொகுதியில் 15 வேட்புமனுக்கள் ஏற்பு

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:31 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக்கழக கட்சி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 21 போ் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்பு மனு பரிசீலனை பெரியகுளம் துணை ஆட்சியா் ரஜத்பீடன், பொதுப் பாா்வையாளா் பீம் சிங் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அமமுக, விசிக, தவெக, நாதக கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் உள்பட 15 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரகுநாதன் வேட்புமனு உள்பட 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.