தேனி மாவட்டம், கண்டமனூரில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
கண்டமனூா் அருகேயுள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுருளிராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு சூரஜ்குமாா் என்ற மகனும், சுபலட்சுமி (22) என்ற மகளும் உள்ளனா். கோவையில் கல்லூரி படிப்பை முடித்த சுபலட்சுமி, அங்குள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசு போட்டித் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.
கடந்த 22-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சுபலட்சுமி வந்திருந்தாா். அப்போது, தந்தைக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த சுபலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினாா்.
அவா் மீண்டு வீடு திரும்பாததால் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சுபலட்சுமி சடலமாக மிதப்பதாகக் கண்டமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும், சுபலட்சுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சகோதரி இறந்த துயரம்: இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை

ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

