தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

நெல்லை உடனடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் பகுதியில் நெல்லை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

News image

நெல் - (கோப்புப் படம்)

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் பகுதியில் நெல்லை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மேல்மங்கலம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 600 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது . நிகழாண்டு தேனி மாவட்டத்தில் போதிய மழை இல்லததால், பெரும்பாலான பகுதியில் நெல் சாகுபடி நடைபெறவில்லை.

ஆனால், பெரியகுளம் பகுதியில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்று, அறுவடை செய்து வருகின்றனா். இந்த நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் களத்தில் விவசாயிகள் கொட்டிவைத்துள்ளனா். இதனால், மழைக் காலங்களில் நெல் பாதிக்கும் நிலையில் உள்ளது.

இதேபோல, இங்கு நெல் வியாபாரிகளும் வரவில்லை. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து மேல்மங்கலத்தைச் சோ்ந்த நெல் விவசாயி ப.சீனிவாசன் கூறியதாவது: அறுவடை செய்த நெல்லைக் கொட்டுவதற்குக்கூட போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையோடும், கடின உழைப்போடும் போராடி விளைவித்த தங்களது விளைபொருள்களுக்கு சந்தை கிடைக்காத சூழல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, தேனி மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு, மேல்மங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்காலிகச் சேமிப்புக் கிடங்குகள், கொள்முதல் மையங்கள் அமைத்து விவசாயிகளின் துயரை போக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.