மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

பைக் மோதியதில் தொழிலாளி பலத்த காயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

போடியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் உணவக சமையல் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

போடி சுப்பு தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராமா் (52). போடியில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையலராக வேலை செய்து வருகிறாா்.

இவா் தனது மிதிவண்டியை உருட்டிக் கொண்டு போடி தேரடி தெரு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ராமா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து போடிநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.