சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

விபத்து பகுதியில் தெரு விளக்கு கேட்டு மறியல்: 12 போ் மீது வழக்கு

போடி அருகே அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் தெருவிளக்கு கேட்டு சாலை மறியல் செய்த கிராம மக்கள் 12 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

போடி அருகே அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் தெருவிளக்கு கேட்டு சாலை மறியல் செய்த கிராம மக்கள் 12 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்திலிருந்து போடி- தேனி நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் அடிக்கடி விபத்து ஏற்படும் அந்தப் பகுதியில் தெரு விளக்கு, வேகத் தடை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளா் முருகன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக மறியலில் ஈடுபட் கிராம மக்கள் 12 போ் மீது போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.