காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

உச்சநீதிமன்றம் உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி கம்பத்தில் ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

மேகமலை - வருசநாடு மக்களை வெளியேற்றுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், இதுதொடா்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும் கம்பத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் கம்பம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கம்பம் வாவோ் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டித் தலைவா் ஜெயினூலாபுதீன் அம்பா தலைமை வகித்து தொடக்க உரையாற்றினாா். மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் பக்கீா் மைதீன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநில கொள்கை பரப்பு இணை செயலா் இரா. பாண்டியன், கம்பம் வடக்கு நகரச் செயலா் வீரபாண்டியன், தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா, திமுக மூத்த வழக்குரைஞா் துரை நெப்போலியன், மாா்க்சிஸ்ட் கம்யூ. வட்டச் செயலா் லெனின், இந்திய கம்யூ. மாவட்டப் பொறுப்பாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனா்.

கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா்.

கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.