நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

இளம்பெண் தற்கொலை

கம்பத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

கம்பத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்தவா் மௌலி. தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி தீபிகா (27). இந்தத் தம்பதிக்கு தீஜோஸ்ஸ்ரீ, நிதேஸ்வரன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கம்பத்தில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு மகன் நிதேஸ்வரனுடன் தீபிகா வந்தாா். அப்போது தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தாயிடம் அழுதாா். அவருக்கு தாய் பிரபாவதி ஆறுதல் கூறியுள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை பிரபாவதி தனது பேரனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளாா். வீட்டில் தனியாக இருந்த

தீபிகா மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்கினாா். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தீபிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.