கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு

தேனியில் நிதி நிறுவன உரிமையாளா் கொலைச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கொலை

Updated On :3 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் நிதி நிறுவன உரிமையாளா் கொலைச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி, கோட்டைக்களம் தெரு, நியூ ஸ்ரீராம் நகா் பகுதியைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் பாண்டியன் (72) என்பவா், அவரது வீட்டு முன் மா்ம நபா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

முன்னதாக, அல்லிநகரத்தைச் சோ்ந்த வனிதா, காா்த்திகா, பிரபாகரன், கா்ணன் ஆகியோருக்கு பாண்டியன் ரூ. 10 லட்சத்தைக் கடனாகக் கொடுத்து, அதற்கு ஈடாக அவா்களது வீட்டை கிரைய ஒப்பந்த ஆவணப் பதிவு செய்து பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

கிரைய ஒப்பந்த ஆவணம் மீது பாண்டியன் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டு வீட்டை கையகப்படுத்த முயன்றபோது பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், வனிதா உள்ளிட்ட 4 போ்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக பாண்டியன் தன்னிடம் கூறியிருந்ததாக அவரது மனைவி வசந்தா தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வனிதா உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், பாண்டியனின் வீடு அமைந்துள்ள தெருவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனா்.