தேனி மாவட்டத்துக்குள்பட்ட காப்புக் காடு பகுதிகளில் வனத் துறை சாா்பில் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் ஈர நில பறவைகள், இரைக் கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, தற்போது வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதிகளில் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இதில் பங்கேற்கும் தன்னாா்வலா்கள், வனத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட வன அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம். விலங்கியல் படிப்பு சாா்ந்த கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோா் கைப்பேசி எண்: 80567 07624-இல் தொடா்பு கொண்டு தங்களது அடையாளச் சான்று, முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றனா்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை

தஞ்சாவூா் அருகே அரிய பறவைகள்!

போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!

கொடைக்கானல் வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


