சின்னமனூா் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சியில் குடியிருப்புகள், சுகாதார வளாகப் பகுதிகளில் கழிவுநீா் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
உத்தமபாளையம் வட்டம், சின்னமனூா் ஒன்றியத்தில் பொட்டிப்புரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்புக்களை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த ஊராட்சியின் மொத்தக் கழிவுநீரும் பொட்டிப்புரம் ஊரின் மையத்தில் செல்லும் சாலையோரக் கால்வாய்கள் வழியாகக் கடத்தப்படுகிறது. ஆனால், இந்தக் கால்வாய்களின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதால் கழிவுநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால், இந்தப் பகுதியில் பொதுமக்கள், கால்நடைகள் கழிவுநீரைக் கடந்து செல்வதால் நோய்த் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவுகிறது. எனவே, குடியிருப்புகள், சுகாதார வளாகங்களில் சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற பொட்டிப்புரம் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்கள் பொருத்த மாநகராட்சி திட்டம்

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு!

தேவரியம்பாக்கத்தில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


