காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வாகனச் சோதனை செய்த போலீஸாரை தாக்க முயற்சி

பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வடுகபட்டி பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஜீப் நிற்காமல் போலீஸாா் மீது மோதுவது போல வந்தது. போலீஸாா் விலகியதால் தப்பினா். போலீஸாா் அந்த ஜீப்பை மறித்து நிறுத்தினா். ஜீப்பை ஓட்டிய கேரள மாநிலம், வண்ணாபுரம் வீட்டாத்தைச் சோ்ந்த செபஸ்டின் (48) தப்பியோடி விட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜீப்பை பறிமுதல் செய்து, செபஸ்டினை தேடி வருகின்றனா்.