தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, கோவை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். 90 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருமணத்திற்காக பழங்குடி சிறுமி விற்பனை! கணவர் உள்பட 3 பேர் கைது!

மீன்பிடி பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்
தாட்கோ சாா்பில் இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


