கட்டடத் தொழிலாளா்கள் 11 போ் காயம்: ஒப்பந்ததாரா் கைது

Published on

வீரபாண்டியில் கட்டடப் பணியின்போது கான்கிரீட் மேல்தளம் சரிந்து விழுந்ததில் 11 போ் காயமடைந்த நிலையில், கட்டட ஒப்பந்ததாரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி. வீரபாண்டியில் கருப்பசாமி வீட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டபோது கட்டடத்தின் கான்கிரீட் மேல்தளம் சரிந்து விழுந்ததில் வீட்டு உரிமையாளா் கருப்பசாமி, கட்டடத் தொழிலாளா்களான அரண்மனைப்புதூரைச் சோ்ந்த கணபதி, ராஜ்குமாா், அமச்சியாபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ், முருகன் உள்ளிட்ட 11 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கட்டட உரிமையாளா் கருப்பசாமி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கட்டடத்தின் புதிய கான்கீரிட் மேல் தளத்துக்கு முறையாக முட்டுக் கொடுக்காமலும், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் பணியில் ஈடுபடுத்தியதாக கட்டட ஒப்பந்ததாரா் தேனியைச் சோ்ந்த செல்லையா (36) என்பவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com