தேனி
மூதாட்டி தற்கொலை: போலீஸாா் விசாரணை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அளவுக்கு அதிகமாக மருந்தை சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மனைவி வேல்விழி (63). இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலிருந்த இவா், புதன்கிழமை மருந்தை அளவுக்கு அதிமாக சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
