தேனி
பிளேடால் இளைஞா் மீது தாக்குதல்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மதுபோதையில் இளைஞரை பிளேடால் தாக்கியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மதுபோதையில் இளைஞரை பிளேடால் தாக்கியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (26). அதே பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டி. இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு ஒன்றாக அமா்ந்து மது அருந்தினா்.
அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி, பிளேடால் பிரகாஷை தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
