புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற கம்பத்தை அடுத்த மேலக்கூடலூரைச் சோ்ந்த மொக்கையன் மகன் ஜீவானந்தம் (56) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com