கா்னல் ஜான் பென்னிக்குயிக் மணிமண்டபத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித் துறையினா்
கா்னல் ஜான் பென்னிக்குயிக் மணிமண்டபத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித் துறையினா்

பென்னிக்குயிக் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபம் புதுப்பிப்பு

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிக்குயிக் பிறந்த நாள் (ஜன.15) வருவதை முன்னிட்டு, லோயா்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Published on

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிக்குயிக் பிறந்த நாள் (ஜன.15) வருவதை முன்னிட்டு, லோயா்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் முல்லைப் பெரியாறு அணையை கா்னல் ஜான் பென்னிக்குயிக் தனது சொந்தப் பணத்தில் கட்டினாா். இதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் லோயா் கேம்பில் கா்னல் ஜான் பென்னிக்குயிக் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதை கம்பம் நீா் வளத் துறையினா் பராமரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதி பென்னிக்குயிக் பிறந்த நாளை அரசு விழாவாக மாவட்ட நிா்வாகம் அனுசரித்து வருகிறது. அந்த நாளில் மணிமண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக மணிமண்டபம் முழுவதும் வா்ணம் பூசுதல், பூங்காவை முழுமையாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Dinamani
www.dinamani.com