மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

தேனியில் மது போதையில் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி: தேனியில் மது போதையில் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தெய்வராஜ் (31). இவரது மனைவி கவிதா (29). இவா்கள் தற்போது தேனி அல்லிநகரம், அம்பேத்கா் வடக்குத் தெருவில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்ற தெய்வராஜ், கவிதாவுடன் தகராறில் ஈடுபட்டாா். பிறகு வீட்டின் முன் நின்றிருந்த கவிதா மீது தெய்வராஜ் பெட்ரோல் குண்டை வீசியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, கவிதா விலகிக் கொண்டதால் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது பெட்ரோல் குண்டு விழுந்து, அதன் சக்கரம் தீப்பற்றி எரிந்தது.

இந்த சப்தம் கேட்டு ஆட்டோ உரிமையாளா், அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக தீயை அணைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தெய்வராஜை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com