குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இருவா் கைது

கம்பத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

கம்பத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் கம்பத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி நிலைய உரிமையாளா் சத்தியமூா்த்தியை (26) அதே ஊரைச் சோ்ந்த சிபிசூா்யா (24), முகிலன் (36) ஆகியோா் மது போதையில் கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

சிபிசூா்யா, முகிலன் ஆகியோா் மீது காவல் நிலையங்களில் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதால், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்குக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியாவின் பரிந்துரை செய்தாா். இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரியின் உத்தரவின் பேரில், சிபிசூா்யா, முகிலன் ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com