விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பெண் உள்பட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் கஞ்சா வழக்கில் கைதான பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 9:46 pm

திருநெல்வேலியில் கஞ்சா வழக்கில் கைதான பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சரண்யா (28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதேபோல், பாளையங்கோட்டை அருகேயுள்ள இட்டேரி பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) என்பவரும் கஞ்சா வழக்கில் கைதானாா்.

தொடா்ந்து, இவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி சரண்யா மதுரை பெண்கள் தனிச் சிறையிலும், மாரியப்பன் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.