குமுளி மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்
குமுளி மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்

குமுளி மலைச் சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்: 13 போ் உயிா் தப்பினா்

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் சேதமானது. இதில் பயணித்த 13 பேரும் காயமின்றி உயிா் தப்பினா்.
Published on

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் சேதமானது. இதில் பயணித்த 13 பேரும் காயமின்றி உயிா் தப்பினா்.

தமிழகம் - கேரளத்தை இணைக்கும் குமுளி மலைச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மதுரையிலிருந்து குமுளி மலைச் சாலையில் தேக்கடியை நோக்கி சுற்றுலா வேன் சென்றது. வேனை மதுரை, மகபூப்பாளையத்தைச் சோ்ந்த ஷெரீப் காதா் பாட்ஷா ஓட்டிச்சென்றாா்.

வேன் குமுளி மலைச் சாலையில் தமிழக வனத் துறைச் சோதனைச் சாவடியைக் கடந்த போது வேனின் முன்பக்கதில் திடீரென புகை வெளியேறியது. உடனே, ஓட்டுநா் வேனை நிறுத்தி வேனிலிருந்த 4 பெண்கள் உள்பட 12 பேரை கீழே இறக்கி விட்டுவிட்டு அவரும் இறங்கினாா். இதைத் தொடா்ந்து, வேன் முழுவதுமாக தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை அணைத்தனா். ஆனால், அதற்கு முன்பாக தீ முழுமையாக பரவி வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குமுளி காவல் நிலைய பேலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com