தேனி அருகே தீ விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள கதிரக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி கணபதியம்மாள் (76). கணவா் இறந்த நிலையில், இவா் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இவா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, பற்ற வைத்திருந்த கொசு பத்தி, இவரது சேலையில் பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த இவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கணபதியம்மாள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆடையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



