லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மளிகைக் கடையில் பணம், சிசிடிவி கேமரா திருட்டு

பெரியகுளத்தில் மளிகைக் கடையின் ஜன்னலை உடைத்து பணம், கண்காணிப்பு கேமராவைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :4 ஜூலை 2026, 4:35 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மளிகைக் கடையின் ஜன்னலை உடைத்து பணம், கண்காணிப்பு கேமராவைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (43). பெரியகுளம் சுதந்திரவீதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை இரவு வழக்கம் போல கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது, பின்பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து பெட்டியில் வைத்திருந்த ரூ. 2 ஆயிரம், கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.