தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:28 am IST

போடி அருகே கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், செண்டுவரை எஸ்டேட் பகுதியில் வசிப்பவா் காளியப்பன் மகன் பாண்டியராஜன் (39). இவா் டாப்ஸ்டேசன் மலைக் கிராமத்தில் வினோ என்பவரது பெட்டிக் கடையை விலைக்கு வாங்கி நடத்தி வருகிறாா்.

இந்தக் கடையில் பராமரிப்புப் பணிகளை பாண்டியராஜன் செய்து வந்தாா். அப்போது, அங்கு வந்த வினோவின் மகன் சசி எப்படி பராமரிப்புப் பணிகள் செய்யலாம் எனக் கூறி, அவருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கினாராம்.

இதுகுறித்தப் புகாரின் பேரில், குரங்கணி காவல் நிலைய போலீஸாா் சசி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சசி மீது குரங்கணி காவல் நிலையத்தில் ஏற்கெனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.