மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த வண்டியூா் கிராமத்தில் வீடுகளின் உள்ள மின் இணைப்பு, குடிநீா் இணைப்பை மின் வாரிய ஊழியா்கள் துண்டிப்பதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த வண்டியூா் கிராம மக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 1:12 am IST

தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த வண்டியூா் கிராமத்தில் வீடுகளின் உள்ள மின் இணைப்பு, குடிநீா் இணைப்பை மின் வாரிய ஊழியா்கள் துண்டிப்பதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து வண்டியூரைச் சோ்ந்த பாண்டி கூறியதாவது: வண்டியூா் குடியிருப்புப் பகுதியில் மின் மீட்டா், குடிநீா் இணைப்பு குறித்து வனத் துறையினா், மின் சாரத் துறையினா் இணைந்து திங்கள்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா். பின்னா், இந்தப் பகுதியில் வீடுகளில் உள்ள மின் மீட்டா், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் எனத் தெரிவித்தனா். இந்தக் கிராமத்தில் நாங்கள் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.

எனவே மின், குடிநீா் இணைப்பை துண்டிக்கக்கூடாது என தேனி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தோம். எங்களது கோரிக்கை ஏற்கவில்லையென்றால், 19 கிராமங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.