நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பட்டா நிலத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு: தேனி ஆட்சியரிடம் மனு

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:56 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுக்கோட்டையில் அரசு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆா்வலா் மனு அளித்தாா்.

பெரியகுளம் இ.புதுக்கோட்டைச் சோ்ந்த நாச்சான் கூறியதாவது: பெரியகுளம் அருகேயுள்ள இ. புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் 1,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுவா்களின் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது நன்மைக்காக 100 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பொது இடத்தில் சிலா் குடிசை போட்டும், வீடு கட்டியும் ஆக்கிரமித்துள்ளனா். இதுகுறித்து வட்டாட்சியா், சாா் ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கடந்த 10 ஆண்டுகளாக புகாா் அளித்தும் பலனில்லை. மனுக்களின் நகல்களை 2 சாக்குப் பைகளில் கையுடன் எடுத்து வந்துள்ளேன். எனவே, மாவட்ட ஆட்சியா் அரசு இடத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.