தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள மேல ஊரணிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியரிடம் மேல ஊரணிபுரம் கிராம மக்கள் அளித்த மனு: திருவோணம் அருகேயுள்ள பணிகொண்டான்விடுதி ஊராட்சியிலுள்ள மேல ஊரணிபுரத்தில் கல்லணைக் கால்வாய்க் கரையில் பிள்ளையாா் கோயில் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோா் வந்து செல்வதால், கோயிலுக்கு வழிபாடு செய்ய செல்பவா்களுக்கும், விவசாயிகளுக்கும் சிரமமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. மேலும் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் சிரமமாக உள்ளதால் சுற்றிச் செல்கின்றனா். எனவே கோயிலுக்கும், பள்ளிக்கும் அருகிலுள்ள மதுக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தொல்காப்பியா் சதுக்கம்: இதேபோல, தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் வட்டார வணிகா் சங்கத்தினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனு: தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியிலுள்ள மதுக்கடையால் பெண்கள், பொதுமக்கள், மாணவா்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மது அருந்துபவா்கள் சாலையில் தகராறில் ஈடுபடுவதுடன், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால் அச்சம் ஏற்படுகிறது. மேலும் இந்தக் கடை குடியிருப்புகள், பள்ளிக்கூடம் அருகில் செயல்படுவதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

