ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்த எர்ராம்பட்டு கிராமத்தினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:00 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வைலாமூா் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியின் ஒரு பகுதியில் உள்ள எர்ரம்பட்டு கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக மயானப் பாதை இல்லை. இதனால் மழைக் காலங்களில் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், திண்டிவனம் சாா்-ஆட்சியா் ஆகியோருக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அக்கிராம மக்கள், அங்கு பணியிலிருந்த மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், கிராம மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் உடனடியாக மயானப்பாதை அமைத்துத் தரவேண்டும். தவறும்பட்சத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாகக் குறிப்பிட்டுள்ளனா்.