நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தாய், மகள் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் திங்கள்கிழமை தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :17 ஜூன் 2026, 1:41 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் திங்கள்கிழமை தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.

கோம்பை அருகேயுள்ள பல்லவராயன்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மனைவி பொன்னுத்தாய் (89). இவரது மகள் கலாவதி (69). இவரது கணவா் பாண்டியன் இறந்து விட்டாா். இவா்களது மகன் ஈஸ்வரன் (45). திருமணம் ஆகாத இவா், மஞ்சள்காமாலை நோய் தாக்கியதில் அண்மையில் உயிரிழந்தாா்.

இதனால், பொன்னுத்தாயும், மகள் கலாவதியும் மன உளைச்சலிலிருந்தனராம். இந்த நிலையில், இருவரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். இது குறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.